தமது பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக பார்க்கவேண்டிய கடமை பெற்றோரைச் சாரும். ஆனால் சில பெற்றோர் தமது கடமைகளிலிருந்து தவறி விடுகின்றனர்.

அது தொடர்பான ஒரு செய்தி இது..

ரம்புக்கனை , அலுகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெற்றோர் , தமது காதலர்களுடன் வாழும் பொருட்டு பிரிந்து சென்றுள்ளனர்.

தாயின் வயது 29 எனவும் , தந்தைக்கு 34 வயதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அனாதரவான பிள்ளைகள் பாட்டி மற்றும் பாட்டனாரின் பராமரிப்பில் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களின் மூன்று பிள்ளைகளில் ஒருவர் விசேட தேவையுடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் , குறித்த பெற்றோர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து தாயும் , தந்தையும் கைதுசெய்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version