இந்தியாவின் , உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நபரொருவர் தன்னுடன் கூலி வேலை செய்து வந்த13 வயது சிறுமி ஒருவரை ஏமாற்றி போதை மருந்து கொடுத்து வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.

இது குறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறி உள்ளார். இதை தொடர்ந்து சிறுமியின் தந்தை குறித்த நபர் மீது பாலியல் வல்லுறவு தொடர்பானமுறைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சந்தேகநபரின்5 வயது மகன் அமித் தனது வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டு இருந்தவேளை காணாமல் போயுள்ளார்.

பெற்றோர்கள் பல இடங்களில் தேடினர். இந்த நிலையில் வீட்டின் அருகே காலி மனை ஒன்றில் சிறுவனின் உடல் தலையில்லாமல் பொலிதீன் பையில் பாதி எரிந்த நிலையில் கிடந்து உள்ளது.

இது குறித்து சிறுவனின் தந்தையும் ,பாலியல் வழக்கில் சந்தேகநபருமான நபர் அளித்த முறைப்பாட்டின் பேரில் சிறுமி கைது செய்யப்பட்டு உள்ளார்.

தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபரை பழிவாங்க அவரது மகனின் தலையை வெட்டி சிறுமி கொலை செய்து உள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

சிறுமி கோபத்தில் சிறுவனின் தலையை துண்டித்து உள்ளார். பின்னர் உடலை செங்கல்லால் சிதைத்து உள்ளார். பின்னர் சிறுவனின் உடலி ஒரு பாலிதீன் பையில் போட்டு தீ வைத்து எரித்து.

நாய் ஒன்று அந்த பாலிதீன் பையை வெளீயே இழுத்து வந்தபோதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது என பொலிசார் தெரிவித்து உள்ளனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version