கராத்தே சண்டை கலை வீரரான இரவு நேர களியாட்ட விடுதியின் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அனுராதபுரத்தில் நடந்துள்ளது.

அனுராதபுரம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட முதிதா மாவத்தை பகுதியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு நேற்றிரவு 11.45 அளவில் சென்ற முகத்தை மூடிய நபர்களை கொண்ட குழுவினர் அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை கூரிய ஆயுதங்களினால் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த விடுதியின் உரிமையாளரான வசந்த சொய்சா என்பவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கராத்தே சண்டை கலை வீரரான இவர் தொலைக்காட்சி ரியலிட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற நபராவார். இந்த தாக்குதலை நடத்த 25 பேருக்கும் சென்றிருந்தாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து அனுராதபுரம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_2975-1024x637

Share.
Leave A Reply

Exit mobile version