கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை அடுத்த வாரம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கைளிப்பதாக அவர் எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.

நவம்பர் மாதம் 14ம் திகதி ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி தனது இந்த முடிவை அறிவிப்பததாக அவர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் பிரதியமைச்சராக பதவிவகித்த விநாயகமூர்த்தி முரளிதரன், ஆனந்தசங்கிரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து இனிவரும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கருணா அம்மான் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்வது தொடர்பில் தனக்கு அறியத்தரவில்லை என்று வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

எங்களுடன் சேர்ந்ததாக கருணா கூறுகிறார்; சேர்ந்து விட்டதாக நாம் கூறவில்லை’

e0ae86e0aea9e0aea8e0af8de0aea4e0ae9ae0ae99e0af8de0ae95e0aeb0e0aebf

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையில் இருந்து விலகி ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து, தான் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கூறியிருக்கின்றாரேயொழிய, சேர்ந்து விட்டதாகவோ சேர்ந்து செயல்படுகின்றோம் என்றோ கூறவில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஊடகங்களுக்கு இன்று (26) அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தாவது.

அவர் தன்னுடைய விருப்பத்தை மாத்திரம்தான் தெரிவித்துள்ளார். அவர் எங்கள் மீது வைத்திருக்கின்ற மதிப்பும், நம்பிக்கையுமாகும். அதனை நான் வரவேற்கின்றேன்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை படிப்படியாகக் குன்றி வருகின்றது. அவர்களின் ஆதரவாளர்களே ஒரு புதிய அணியை உருவாக்க வேண்டுமென விரும்புகின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டதென்று இதுவரை காலமும் கூறிவந்த இரா. சம்பந்தன், திடீரென நிலைமையை மாற்றி அதனை தாங்களே உருவாக்கியதாகவும், விடுதலைப் புலிகளுக்கும் கூட்டமைப்புக்கும் எதுவித சம்பந்தமும் இல்லையெனவும் கூறியுள்ளார்.

சம்பந்தனின் இந்த மனமாற்றம் உண்மையாக இருந்தாலும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தோற்றுவித்துள்ளது. ஆனால், அதைவைத்து மக்களை ஏமாற்றி தமிழர் விடுதலைக் கூட்டணியை முற்றாக அழிக்க முற்பட்டதையும் விரைவில் ஒத்துக்கொள்வார் என நம்புகின்றேன்.

இன்றைய காலத்தின் தேவை மக்கள் விருப்பப்படி ஒரு புதிய அணியை உருவாக்கி அவர்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய வகையில் அநேகரின் விருப்பப்படி ஒரு புது அணியை பல்வேறு கட்சிகளுடன் கலந்தாலோசித்து உருவாக்க உத்தேசித்துள்ளேன்.

 பல்வேறு கட்சிகளுடன் இதுசம்பந்தமாக பேசியும் உள்ளேன். அதனடிப்படையில் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது ஆதரவினை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.  அதேபோன்று வேறு பலரும் புதிய அணியொன்று உருவாகினால் அதில் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுதான் உண்மை. ஆனால் இதுசம்பந்தமாக வெளியாகிய பல்வேறு கருத்துக்கள் அத்தனையும் உண்மைக்கு புறம்பானவையாகும்.  தமிழர் விடுதலைக் கூட்டணி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி அவ்வப்போது மக்களுக்கு அறியத்தருவோம்; என அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version