அனுராதபுரத்தில் அமைந்துள்ள இரவு விடுதியில் புகுந்த கும்பலொன்று அதன் உரிமையாளரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தின் சி.சி.டிவி காணொளி வெளியாகியிருந்தது. இந்நிலையில் இச்சம்பவத்தின் மேலுமொரு காணொளி வெளியாகியுள்ளது.

இதில் ஹோட்டலினுள் சொத்துக்கள் சேதமாக்கப்படுகின்றமை , அங்கிருந்த ஊழியர்கள் தாக்கப்படுகின்றமை போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

கராத்தே வீரர் கொலை – மேலும் 6 பேர் கைது-  இன்று இறுதி கிரியைகள் – (வீடியோ)

119186_MAH00063.MP4_snapshot_00.04_[2015.10.27_18.16.11]

அநுராதப்புரம் – கடபனஹ பிரதேச இரவு களியாட்ட விடுதியின் உரிமையாளரான கராத்தே வீரர் வசந்த சொய்சா கொலை தொடர்பில் மேலும் 6 பேர், இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட 8 சந்தேகத்துக்குரியவர்களில் 6 பேரை எதிர்வரும் 9ஆம் திகதி வரையில்  விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இன்றைய தினம் அநுராதப்புரம் நீதவான் முன்னிலையில் முன்னிலை செய்யப்பட்ட போதே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்;டுள்ள மேலும் இரண்டு பேரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதவான் அனுமதியளித்துள்ளார்.

முகத்தை மூடிய நிலையில் பிரவேசித்த 20க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய குழுவொன்று குறித்த இரவு களியாட்ட விடுதிக்கு உட்புகுந்து அதன் உரிமையாளரை கடந்த 24 ஆம் திகதி இரவு கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சம்பவம் தொடர்பிலான ஏனையவர்களை கைது செய்ய தற்போது துரித விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை ஊடக பேச்சாளர் ரூவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட 57 வயதான இரவு களியாட்ட விடுதியின் உரிமையாளரான கராத்தே வீரர் வசந்த சொய்சாவின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version