அவுஸ்திரேலியாவின் மோர்லாண்ட் நகர மேயராக இலங்கைப் பெண் ஒருவர்  முதல்முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் கிறீன் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சமந்தா இரட்ணம் என்ற பெண்ணே இவ்வாறு மேயராகத் தெரிவாகியுள்ளார்.

 சமாந்தா, தொழிற்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து தோ்தலில் வெற்றியீட்டியுள்ளதுடன், இதற்கு முன்னர் இரு தடவைகள் மேயர் பதவிக்காக போட்டியிட்ட போதிலும் வெற்றிபெறவில்லை.

இலங்கையில் பிறந்த சமந்தா இரட்ணம், உள்நாட்டு யுத்தம் காரணமாக பெற்றோருடன்  கடந்த 1989 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார்.

வெற்றியைப் பொறுத்தவரை கடந்த இரு வருடங்களைவிட இவ் வருடம் அதிக நம்பிக்கையுடன் இருந்ததாக சமந்தா தெரிவித்துள்ளார்.

நேபா­ளத்தின் முதல் பெண் ஜனா­தி­ப­தி­யாக பெண்கள் உரி­மைகள் செயற்­பாட்­டாளர் நிய­மனம்
30.10-2015

nepolநேபா­ளத்தின் முத­லா­வது பெண் ஜனா­தி­ப­தி­யாக பெண்கள் உரி­மைகள் பிர­சா­ர­க­ரான பித்யா தேவி பந்­தாரி அந்நாட்டு பாரா­ளு­மன்­றத்­தால் ­தெ­ரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.

இது அந்­நாட்டின் அர­சியல் வர­லாற்றில் முக்­கி­யத்­துவம் மிக்க நிகழ்­வாக கரு­தப்­ப­டு­கி­றது.நேபா­ளத்தின் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்ட இரண்­டா­ம­வ­ராக பித்யா தேவி பந்­தாரி (54 வயது) விளங்­கு­கிறார்.

தற்­போது அவர் நேபாள ஆளும் பொது­வு­டைமை கட்­சியின் உப தலை­வ­ராக உள்ளார்.அவர் 2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2011 ஆம் ஆண்டு வரை­யான காலப் பகு­தியில் நேபா­ளத்தின் பாது­காப்பு அமைச்­ச­ராக சேவை­யாற்­றி­யுள்ளார்.

இந்த மாத ஆரம்­பத்தில் நேபா­ளத்தின் புதிய பிர­த­ம­ராக கே.பி. ஷர்மா அலி தெரிவு செய்­யப்­பட்டார். இந்­நி­லையில் புதிய ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள பித்யா தேவி பந்­தாரி பிர­த­மரின் நெருங்­கிய நண்­பர்கள் வட்­டா­ரத்தைச் சேர்ந்­த­வ­ராவார்.

ஆண்கள் செல்­வாக்குப் பெற்று விளங்கும் நேபாள அர­சி­யலில் நீண்ட கால­மாக ஈடு­பட்டு வரும் பெண்­ணொ­ரு­வ­ராக பித்யா தேவி பந்­தாரி விளங்­கு­கிறார்.

அவர் நேபா­ளத்தில் முடி­யாட்சி கலைக்­கப்­பட்ட பின்னர் 2008 ஆம் ஆண்டில் அந்­நாட்டின் முத­லா­வது ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்ட ராம் பரன் யாதவின் இடத்­திற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version