கராட்டே வீரர் வசந்த சொய்சா கொலை செய்யப்பட்டமை தொடர்பான பிரதான சந்தேகநபரான எஸ்.எப்.லொக்கா எனப்படும் இரான் ரணசிங்க இன்று சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் விசேட காவல்துறையினரின் சுற்றிவளைப்பின் போதே அவர் கைதானதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை. அவரது சகோதரர் அசித்த ரணசிங்கவை இரண்டு தினங்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அனுராதபுரம் மேலதிக நீதிவான் நதீகா பி.பியரத்னவிடம் சந்தேக நபர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
25 வயதான குறித்த சந்தேகநபர் நேற்று தங்காலை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
அனுராதபுரம் இரவு களியாட்ட விடுதியின் உரிமையாளரான கராட்டே வசந்த கொலை செய்யப்பட்டமை தொடர்பாக இதுவரை 27 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.