இந்­தி­யாவில் தடை­செய்­யப்­பட்ட இயக்­க­மான விடு­த­லை­பு­லிகள் இயக்­கத்தின் தலைவர் வேலுப்­பிள்ளை பிரபாக­ரனின் உரு­வப்­படம் பொறிக்­கப்­பட்­டுள்ள கார் ஒன்று தமிழ்­நாட்டில் வலம் வந்­துள்­ளமை பர­ப­ரப்பை ஏற்படுத்­தி­யுள்­ளது.

இந்­தி­யாவில் புலிகள் இயக்கம் இன்­னமும் தடை செய்­யப்­பட்ட நிலையில் பிர­பா­க­ரனின் படம் காரின் முன்­பக்­கத்தை அலங்­க­ரித்த குறித்த காரை தமிழ் உணர்வை வெளிப்­ப­டுத்தும் வகையில் உரி­மை­யாளர் வடி­வ­மைத்­துள்­ள­தாக தெர­ிவிக்­கப்­ப­டு­கி­றது. ஆயினும் இதன் உரி­மை­யாளர் யார் என்பது தொடர்பிலான விபரம் வெளியிடப்படவில்லை.

pirapakarans

ஒரு ரூபாய் பிச்சை கேட்ட சிறுவனை காலால் எட்டி உதைத்த பெண் அமைச்சர்(வீடியோ )

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு ரூபாய் பிச்சை கேட்ட சிறுவனை பெண்  அமைச்சர் ஒருவர் காலால் எட்டி உதைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பன்னா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மொழிவாரி மாநிலங்கள்  பிரிக்கப்பட்டதன் தொடர்பான விழா ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய பிரதேச மாநில மூத்த பெண் அமைச்சர்  குசும் மெதிலேவின் காலைத் தொட்டு அந்த சிறுவன் பிச்சை கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமுற்ற அமைச்சர் அவனை காலால் எட்டி உதைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட்டார்.

இந்த வீடியோ நேற்று இணையங்களில் வைரலானது. குசும் மெதிலே மத்திய பிரதேச மாநில சட்ட அமைச்சரும் கூட.

Share.
Leave A Reply

Exit mobile version