பா.ஜனதா முன்னாள் பிரதிநிதியும், ஒ.ஆர்.எப். அமைப்பின் தலைவருமான சுதீந்திர குல்கர்னி மீது கடந்த 12-ம் தேதி சிவசேனாவினர் கருப்பு மையைவீசி அலங்கோலப்படுத்திய சம்பவம் உலக அளவில் அதிர்வை கொடுத்த நிலையில்,

குல்கர்னியின் மீது மை வீசியதன் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவின் குரலாக தங்களை வரித்துக் கொண்ட சிவசேனைகள் பொதுமக்கள் முன்பாகவே ஆர்.டி.ஐ செயற்பாட்டாளரை இரும்புக்கம்பியால் தாக்கி மை பூசியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை செயற்பாட்டாளர் மல்லிகார்ஜூன் பாய்கட், சட்ட விரோதமாக நடக்கும் பல சமூக அநீதிகளை தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இவர், அண்மையில் இந்த சட்டத்தின் மூலமாக, 14 ஆயிரம் சதுர அடியில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடத்தைப் பற்றிய விவரங்களை, நேற்று லத்தூர் நகரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அம்பலப்படுத்தினார்.

இந்நிலையில், இன்று அவரை அங்குள்ள கல்லூரி ஒன்றிற்கு குண்டுகட்டாக தூக்கி வந்த சிவசேனையினர், அங்கு கூடியிருந்த சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் முன்னிலையில் அவரை இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கி, அவரது முகத்தில் கருப்பி மையைப் பூசியுள்ளனர்.

குல்கர்னி மீது மை வீசியது உட்பட இந்தியாவின் பன்முகத்தன்மையைக் குலைக்கும் வகையில் பல்வேறு கலாச்சார தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் சிவ சேனையினரின் இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version