கத்தோலிக்க திருச்சபையானது நவம்பர் மாதம் மூன்று விதமான ஆத்துமாக்களை நினைவு கூறுகின்றது ஒன்று வெற்றிக் கொண்ட ஆத்துமாக்கள் இரண்டாவது துன்புறும் ஆத்துமாக்கள் மற்றையது இவ்வுலகில் போராடும் ஆத்துமாக்கள்.
இவற்கமைய நேற்று முதலாம் திகதி கத்தோலிக்க திருச்சபையானது வெற்றிக் கொண்ட சகல புனிதர்களுடைய திருவிழாவைக் கொண்டாடியது.
இன்று 2ந் திகதி துன்புறும் மரித்த ஆத்துமாக்களை நினைவு கூர்ந்து இம்மாதம் முழுதும் விஷேடமாக இவர்களுக்காக செபிக்கின்றது.
இன்று திங்கள்கிழமை (02) அணைத்து சேமக்காலைகளிலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மக்கள் தங்கள் உறவுகளின் கல்றைகளுக்குச் சென்று அவர்களுக்காக செபிப்பது வழமையாகும்.
இதற்கமைய மன்னார் மறைமாவட்டதில் கத்தோலிக்கர் செறிந்து வாழும் பேசாலை சேமக்காலையில் அருட்பணி செபமாலை அடிகளார் ஆத்துமாக்களுக்கான திருப்பலி ஒப்புக்கொடுப்பதையும் கல்லறைகளை மக்கள் தரிசித்து செபிப்பதையும் படங்களில் காண்கின்றீர்கள்.