இரத்தினபுரி பாலாங்கொடை வீதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலியாகியதுடன் மூவர் படுகாயமடைந்தனர்.

இரத்தினபுரி பலாங்கொடை பிரதான வீதியில் பாதகொட பிரதேசத்தில் வேகமாக பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த 04 பேரும் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்களை இரத்தினபுரி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் போது செல்லும் வழியில் ஒருவர் மரணமடைந்ததுடன் ஏனைய மூவரையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி – பாதகொட பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

unnamed62

இ.போ.ச – தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

 
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (09) பிற்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது பேர் படுகாயங்களுடன் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றும் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் வூட்லேண்ட் பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் சென்ற பயணிகளில் 9 பேர் படுகாயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இதில் மேலதிக சிகிச்சைக்காக 5 பேர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தனியார் பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version