பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்பவர்கள் உறங்குவது, உணவு உட்கொள்வது, பத்திரிகை வாசிப்பது, மேக் அப் செய்துகொள்வது சகஜம்.
ஆனால், ரயிலில் பயணம் செய்த இளைஞனொருவன் பல்துலக்கியவாறு வந்த சம்பவம் பிரிட்டனில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
லண்டனில், சேவையில் ஈடுபட்டிருந்த ரயில் ஒன்றில் பச்சை நிற கோட் அணிந்திருந்த இந்த இளைஞன், ஆசனமொன்றில் அமர்ந்திருந்து பல் துலக்கியவாறு பயணம் செய்தான்.
பல் துலக்கிக்கொண்டே அவன் பத்திரிகையையும் வாசித்துக்கொண்டிருந்தான்.
ரயிலில் பல் துலக்கிக் கொண்டிருந்த இளைஞனைப் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
தன்னை பயணிகள் சிலர் படம்பிடிப்பதை மேற்படி இளைஞன் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
இக்காட்சியை படம்பிடித்த ஒருவர் இணையத்திலும் வெளியிட்டுள்ளார்.
இந்த இளைஞன் ரயிலில் இருந்து இறங்கியபின் பயணிகளிடமிருந்து பெரும் சிரிப்பொலி எழுந்ததாக வீடியோவை வெளியிட்ட நபர் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய அனகோண்டா பாம்பு…! (Video)
மரண பயத்தை ஏற்படுத்தும் உலகின் மிகப்பெரிய அனகோண்டா பாம்பு… இந்த காட்சியை நீங்கள் இதற்கு முன்னர் எப்போதும் பார்த்திருக்க மாட்டீர்கள்…(வீடியோ)