மறைந்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளரும் கோட்டே ஸ்ரீ நாகவிகாரையின் விகாராதிபதியுமான மாதுலு வாவே சோபித தேரரின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இன்று பாராளுமன்ற மைதானத்தில் இடம்பெறுகின்றன.
கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே,
சோபித தேரர் கடந்த சில காலமாகவே இருதய நோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அதிகாலை 4.30 மணியளவில் தனது 73ஆவது வயதில் காலமானார்.
அவரது பூதவுடல் அன்றிரவு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு கோட்டே ஸ்ரீ நாகவிகாரையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவருடைய இறுதிக் கிரியை பாராளுமன்ற மைதானத்தில் நடைபெறுகின்றது.
இன்று நடைபெறும் அவரது இறுதிச் சடங்குகளை பூரண அரச மரியாதையுடன் இடம்பெறுவதுடன் இன்றைய தினத்தை தேசிய துக்க தினமாகவும் அனுஷ்டிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதேவேளை மாதுலுவாவே சோபித தேரரின் மறைவை நாடுபூராகவும் உள்ள மக்கள் துக்க தினமாக அனுஷ்டிக்கும் வகையில் நாட்டில் சகல பகுதிகளிலும் பெளத்த காவி நிற கொடிகளை பறக்கவிட்டுள்ளதுடன் இன்றைய தினம் நாட்டில் உள்ள மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் அனைத்தையும் மூடுமாறும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
அதேபோல் பெளத்த பிரிவினா பாடசாலைகள் மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே பகுதிக்குரிய பாடசாலைகளும் மூடப்படவுள்ளன. மேலும் கடந்த மூன்று நாட்களாக மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தவந்தனர்.
மக்களுக்கு இன்று முற்பகல் 11 மணி வரை மக்கள் அவருக்கான இறுதி அஞ்சலிகளை செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பிரதமர் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தேரருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதேபோல் பெரும்திரளான மக்கள் இறுதி அஞ்சலியை செலுத்தவும் வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நாகவிகாரையில் இருந்து கொண்டுசெல்லப்படும் அவரது உடல் ஊர்வலாமாக எடுத்து செல்லப்பட்டு பாராளுமன்ற மைதானத்தை வந்தடையும் எனவும் மக்களை இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளுமாறும் நாகவிகரை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாத பொதுமக்கள் இன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் பாராளுமன்ற மைதானத்தை வந்தடையுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தனது உடலை தகனம் செய்ய முன்னர் தனது உடலில் இருந்து எடுக்ககூடிய உறுப்புகளை தானம் செய்ய தான் விரும்புவதாகவும் அவரது கண் மற்றும் பயனுள்ள உறுப்புகளை உடலுறுப்பு தான சங்கத்திடம் வழங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளதாக ஸ்ரீ நாகவிகாரையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் அவரது வாழ்க்கை வரலாற்றை பாடநெறியில் உட்புகுத்தவும் அனைத்து நூதனசாலைகளிலும் புத்தகமாக வைக்குமாறும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தனது இறுதிக் கிரியைகள் குறித்து முன்கூட்டியே வெளிப்படுத்தியிருந்த சோபித்த தேரர்