லண்டன்: வீட்டில் அமர்ந்து சப்பாத்தி சுடத் தான் நான் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் தெரிவித்ததாக அவரின் முன்னாள் மனைவி ரெஹம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் பத்திரிக்கையாளர் ரெஹமை கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து அக்டோபர் மாதம் விவாகரத்து செய்தார். இந்நிலையில் விவாகரத்து குறித்து ரெஹம் முதன்முதலாக பேட்டி அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,16-1447669087-imran-khan-texted-talaq-to-wife-reham-to-call-off-10-month-marriage-600
சப்பாத்தி
நான் சமையல் அறையில் இருந்து சப்பாத்தி சுட வேண்டும். வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார்கள். நான் எங்கும் வெளியே செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தார்கள்.
இம்ரான் கான்
நான் அதிகமாக பேசுவேன். இம்ரான் கானுடன் பேச முயற்சித்துள்ளேன். அவருடன் அரசியலை பற்றி மட்டுமே பேச முடியும். பாலிவுட் படங்களை பற்றி கூட பேச முடியாது.
திருமணம்
வருமானம் நின்றுள்ளதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். என்னை காதலிப்பதாக அவர் கூறியதை நம்பினேன். ஆனால் இருவரும் வித்தியாசமானவர்கள் என்றார் ரெஹம்.
கட்சி
ரெஹம் இம்ரான் கானை அடித்து நொறுக்கியதாகவும், அவரது கட்சியை கைப்பற்ற நினைத்ததாகவும் இம்ரானுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்….
தலாக் தலாக் தலாக்: எஸ் எம் எஸ் மூலம் மனைவியை விவாகரத்து செய்த இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் எஸ்.எம்.எஸ். மூலம் மூன்று முறை தலாக் கூறி தனது இரண்டாவது மனைவி ரெஹமை விவாகரத்து செய்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் பத்திரிக்கையாளரான ரெஹமை கடந்த ஜனவரி மாதம் இஸ்லாமாபாத்தில் திருமணம் செய்து கொண்டார். இம்ரான் தனது மனைவி வீட்டை கவனிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் ரெஹமுக்கோ கட்சியை கைப்பற்றும் ஆசை வந்துவிட்டது.

இதையடுத்து அவர்கள் திருமணமான பத்து மாத்தில் பிரிந்துவிட்டனர்.

இம்ரான் ரெஹமை லண்டனுக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளார். ரெஹம் பிர்மிங்ஹாமில் விமானத்தில் இருந்து இறங்கியதும் அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது.

எஸ்.எம்.எஸ்.ஸில் இம்ரான் கான் மூன்று முறை தலாக் என்று எழுதியிருந்துள்ளார். அதன் பிறகு இமெயில் அனுப்பி உன்னை மார்க்கப்படி விவாகரத்து செய்கிறேன் என்று இம்ரான் தெரிவித்துள்ளார்.

ரெஹமை இம்ரான் கட்சியின் மூத்த அதிகாரிகள் லண்டனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து ரெஹம் இம்ரானை பிரிய அளிக்கப்பட வேண்டிய தொகை பற்றி பேசப்பட்டுள்ளது.

ரெஹம் இம்ரான் கானை தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைத்தார். இதனால் அவர்களின் வீடு போர்க்களமானது என்று இம்ரானுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

சூனியத்தால் விவாகரத்து நடக்கிறதாம்: சொல்வது இம்ரான் கானின் முன்னாள் மனைவி


லண்டன்: சூனியம் தான் தானும், தனது கணவரும் பிரியக் காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹம் தெரிவித்துள்ளார்.முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் பத்திரிக்கையாளரான ரெஹமை கடந்த ஜனவரி மாதம் இஸ்லாமாபாத்தில் திருமணம் செய்து கொண்டார்.

The Quran states that the fundamental reason why Iblees taught people black magic was in order to cause separation between husband & wife

திருமணமான பத்து மாதத்தில் அவர்கள் விவாகரத்து பெற்றுள்ளனர். ரெஹம் இம்ரான் கானின் கட்சியை கைப்பற்ற முயன்றதால் தான் அவர்கள் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து ரெஹம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கணவன் மனைவியை பிரிக்க தான் சாத்தான் மக்களுக்கு சூனியத்தை கற்றுக் கொடுக்கிறது என்று குர்ஆனில் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version