குவைட்டில் பணிப்பெண்ணாக சென்று மர்மமான முறையில் உயிரிழந்த கெக்கிராவையைச் சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அவரது சடலத்துக்கு மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனைகளில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கெக்கிராவை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான அவர், இரண்டு வருடங்களுக்கு முன்னர் குவைட் சென்றிருந்தார்.
கடந்த 5ம் திகதி அவர் குவைட்டில் இறந்துவிட்ட செய்தி அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனையில் அவரர் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியாகி இருப்பதாக, நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அவசர மரண பரிசோதனை வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.