திருகோணமலையில் தனது வீட்டுடன் சேர்த்து மனைவியையும் மண்ணென்ணை ஊற்றி எரிக்க முயற்சித்த சந்தேகநபரொருவர் இம் மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபயபுர பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மனைவியுடன் முரண்பட்ட குறித்த சந்தேகநபர் சனிக்கிழமை (14) இரவு போதையில் வீட்டுக்குச் சென்று மனைவியையும், வீட்டையும் மண்ணெண்ணை ஊற்றி எரிக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது மனைவி சத்தமிட்டதால் அயலவர்கள் ஓடி வந்து குறித்த சந்தேகநபரின் மனைவியை காப்பாற்றியுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து மக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (15) திருகோணமலை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து 39 வயதுடைய இவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

இச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version