பாடசாலை மாணவிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை-மியனகந்துர மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவிகள் இருவரே துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த ஆசிரியர் மாணவிகளுக்கு கையடக்கத்தொலைபேசியை வாங்கிக்கொடுத்துள்ளதுடன் , அதன் ஊடாக அவர்களுக்கு குறுந்தகவல்களையும் அனுப்பி வந்துள்ளார்.

பின்னர் அவர்களை வலையில் வீழ்த்தி துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார்.

குறித்த ஆசிரியர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார் .மேலும் அவரை பணியிலிருந்து நீக்க , ஊவா மாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை குறித்த ஆசிரியரை கைதுசெய்யும் போது அப்பாடசாலையில் குழப்ப நிலையொன்றும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version