மான்செஸ்டர்: 15 வயது சிறுவனுடன் சுமார் 80 முறை உடலுறவு வைத்து கர்ப்பமான ஆசிரியைக்கு இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கி மான்செஸ்டர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.லண்டனில் உள்ள ஒல்தம் பகுதியைச் சேர்ந்தவர் கரோலின் பெர்ரிமேன்.

30 வயதான இவர் அங்குள்ள ஆப்ரகாம் மாஸ் கம்யூனிட்டி பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இவர் முகநூளில் மாணவர்களுடன் சேட் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.அப்போது அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனின் அறிமுகம் கிடைத்துள்ளது.

அந்த மாணவனுக்கு வயது 15. முகநூளில் தொடர்ந்து இருவரும் இரவு பகலாக சேட் செய்து வந்துள்ளனர்.

நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மாறியது. அதையடுத்து இருவரும் தங்கள் செல்பேசி எங்களைப் பரிமாறிக்கொண்டனர். அதிலிலிருந்து அவர்கள் நெருக்கம் இன்னும் அதிகமானது.பள்ளி நேரத்தில் இடைவேளையின் போது பெர்ரிமேன் அந்த மாணவனை தனது காருக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.பலநாட்கள் அவரது வீட்டுக்கும் அழைத்துச் சென்று இரவு நேரங்களில் இருவரும் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.

இவ்வாறாக கடந்த நான்கு மாதங்களில் அந்த மாணவனுடன் 80 முறை உறவு வைத்துள்ளார். பாதுகாப்பான முறையில் உறவு கொண்டதால் அந்த ஆசிரியை கர்ப்பமானார்.

அதனையடுத்து, மாணவனின் பெற்றோர்கள் ஆசிரியை மீது மான்செஸ்டர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆசிரியையின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், இளைய சமுதாயத்தினருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் இதுபோன்று தவறான செயல்களில் ஈடுபடுவதால் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்று தெரிவித்த நீதிபதிகள் அவருக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தனர்.

2E898ED200000578-3322418-image-a-87_1447780106033

Disgraced Caroline Berriman, of Oldham, Lancashire, admitted sex with the teenager

மேலும், அந்த ஆசிரியைக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதை கருத்தில் கொண்டும், அவருடைய குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த குறைந்தபட்ச தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதனையடுத்து பெர்ரிமேன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Share.
Leave A Reply

Exit mobile version