உக்ரேனில் ஊழலுக்கு எதிரான கூட்டமொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாதுகாப்புத் தலைவரின் தலையில் காலால் உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்ட லவிவ் பிராந்திய பாதுகாப்புத் தலைவரான வஸிலி பிஸ்னி (52 வயது), பாராளுமன்ற உறுப்பினரான வொலடிமைர் பராசுக்கை (28 வயது) விடவும் தான் உக்ரேனிய நலனுக்காக அதிகளவில் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கவும் அவரது கருத்தால் கடும் சினத்துக்குள்ளாகிய பராசுக் திடீரென தனது காலைத் தூக்கி வஸிலி பிஸ்னியின் தலையில் உதைத்துள்ளார்.
இதனால் அந்தக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கிருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு இருவரையும் அங்கிருந்து தனித்தனியாகப் பிரித்து அழைத்துச் சென்று மேலும் மோதல்கள் ஏற்படாது தடுத்துள்ளனர்.
இது தொடர்பில் பராசுக் விபரிக்கையில், இது உணர்ச்சிவசப்பட்டதால் ஏற்பட்ட நிகழ்வாகும். இது போன்று ஒருவர் இவ்வாறு தவறான சொற்பிரயோகத்தைக் மேற்கொள்வதற்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.