திருகோண­மலை கடற்­படைத் தளத்­தி­லுள்ள கோத்தா முகாம் தொடர்பில் முழு­மை­யான விசா­ரணை வேண்­டு­மென நான் பாராளுமன்றத்தில் கூறியபோது அத்­த­கை­ய­தொரு முகா­மில்­லை­யென பிர­தமர் மறுத்தார்.

ஆனால், இன்று ஐ.நா. வின் காணாமல்போனோர் குறித்த செயற்­கு­ழு­வினர் திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­முக்குள் இர­க­சிய தடுப்பு முகா­மொன்று இருப்­பதை நாங்கள் அவ­தா­னித்தோம் என்று உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர். இதற்கு அர­சாங்­கமும் பிர­த­மரும் என்ன பதில் கூறப்­போ­கின்­றார்கள்?

இவ்­வாறு வினா­வெ­ழுப்­பினார் ஈ.பி.ஆர்.எல்.எப். பின்  தலை­வரும் முன்னாள் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருமான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்.

kathalll

திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­முக்குள் இர­க­சிய தடுப்பு முகா­மொன்று இருப்­பதை நாங்கள் அவ­தா­னித்தோம் என ஐ.நா.வின் காணாமல்போனோர் குறித்த செயற்­கு­ழுவின் பிர­தி­நி­திகள் தமது விஜ­யத்­தையும் விசா­ர­ணை­க­ளையும் முடித்த பின்னர் கொழும்­பி­லுள்ள ஐ.நா. அலு­வ­ல­கத்தில் கடந்த புதன்­கி­ழமை நடத்­திய செய்­தி­யாளர்  மாநாட்டில்   முகாம் குறித்து கூறிய விடயம் தொடர்­பாக விசா­ரித்த போதே சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

நான் கடந்த பெப்­ர­வரி மாதம் பாரா­ளு­ மன்றில் கோத்தா முகாம் குறித்த உண்­மையை வெளி­யிட்­டி­ருந்தேன்.

திரு­கோ­ண­ம­லையில் இருக்கக் கூடிய கடற்­படை முகாமில் 35 குடும்­பங்­களும் அதே இடத்தில் கோத்தா முகாம் என்று அழைக்கப்படுகின்ற பிறி­தொரு முகாமில் 700 பேருக்கும் மேல் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

இவர்­க­ளுக்கு என்ன நடந்­தது? கோத்தா முகாம் தொடர்பில் முழு­மை­யான விசா­ரணை வேண்டும். சாட்­சி­க­ளுக்கு உயிர் உத்­த­ர­வாதம் தரப்­ப­டு­மானால் சாட்­சி­யங்­க­ளையும் வழங்க தயா­ரா­க­வுள்­ளோ­மென நான் பாரா­ளு­மன்றில் தெரி­வித்­தி­ருந்தேன்.

இதற்கு பதில் அளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முழுப் பூச­ணிக்­காயை சோற்றில் மறைப்­பது போல் தான் இராணுவத்தளபதியிடமும் கடற்­படைத் தள­ப­தி­யி­டமும் விசா­ரித்­த­தா­கவும் அவ்­வா­றான முகாம்கள் எதுவும் இல்­லை­யென அன்று கூறினார்.

இன்று என்ன நடந்­துள்­ளது? காணாமல் போனோர் தொடர்­பான விசா­ர­ணை­களை இலங்­கைக்கு விஜயம் செய்து மேற்­கொண்ட குழு­வி­னரின் பிர­தி­நி­தி­களே திரு­கோ­ண­மலை கடற்படை முகா­முக்குள் இர­க­சிய தடுப்பு முகா­மொன்று இருப்­பதை நாங்கள் அவ­தா­ னித்தோம்.

நாம் அவ­தானம் செலுத்­திய பகு­தியில் 12 அறைகள் எவ்வித வச­தி­க­ளு­மின்றி காணப்­பட்­டன. 2010 ஆம் ஆண்­டு­வரை இதில் ஆட்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என நாம் சந்­தே கம் கொள்­கிறோம் எனக் கூறி­யுள்­ளனர்.

இதி­லி­ருந்து என்ன தெரி­கின்­றது? யுத் தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாக கூறப்­படும் 2009 மே இற்கு பின்னும் சித்­தி­ர­வ­தை­களும் கடத்­தல்­களும் காணா மல் போன­மையும் இடம்­பெற்­றுள்­ளது என்­பது நிரூ­ப­ண­மா­கி­றது.

மேற்­படி முகாமில் நீண்ட கால­மாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த ஒரு குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்கள் அண்­மையில் விடு­விக்­கப்­பட்டு கொடிகாமம் பகு­திக்கு வந்தி­ருப்­ப­தை நான் நன்­றாக அறிவேன்.

எனவே, ஐ.நா. குழு­வினர் கூறிய அனைத்து விட­யங்­களும் உண்­மை­யா­ன­வையே. குறித்த முகாமில் இருந்­த­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது? விடு­தலை செய்­யப்­பட்­டார்­களா? இல்­லையா? என்ற இர­க­சியம் யாருக்­குமே தெரி­யாது.

விட்­ட­தற்கும் சாட்­சி­ய ­மில்லை. சுருக்­க­மாகக் கூறப் ­போனால் எதற்­குமே பதி­வில்லை.

ஆனால், இது தொடர்பில் புல­னாய் வுப் பிரி­வினர் விசா­ரணை நடத்தி வரு­கின்­றார்­க­ளென்று தற்­பொ­ழுது அர­சாங் கம் கூறு­கி­றது.

ஏற்­க­னவே, இவ்­வா­றான­தொரு முகாமில்லை. விசா­ர­ணைகள் அவ­சி­ய­மற்­ற­வை­யெனக் கூறி வந்த அர­சாங்கம், தற்­பொ­ழுது விசாரணைகளை நடத்திக் கொண்­டி­ருக்­கி­றோ­மென முன்­னுக்குப் பின் முர­ணாக கூறி வரு­கி­றது.

பல­வந்­த­மாக காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் திரு­கோ­ண­மலை கடற்­படை முகாம் தொடர்பில் ஐ.நா. நிபு­ணர்கள் சுமத்­திய குற்றச்சாட்டு தொடர்பில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டுமென இலங்கை வெளி­யு­றவு அமைச் சின் பேச்­சாளர் மஹ­சினி கொலன்னே உறு­தி­ய­ளித்­துள் ளார்.

திரு­கோ­ண­ம­லையில் இயங்­கிய இர­க­சிய முகாம் தொடர்பில் ஐ.நா. குழு­வினர் இன் னும் பல சந்­தே­கங்­களை எழுப்பி­யுள்­ளனர். 2008ஆம் ஆண்டு கொழும்பில் கடத்­தப்­பட்ட 11 பேர் திருகோ­ண­ம­லையில் இயங்­கிய மேற்படி முகா­முக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாகவும் அங்கு வைத்து கொல்­லப்­பட்­டி­ருப்­பார்கள் என்­பது தொடர்­பிலும் சந்­தே­கங்கள் கிளப்­பப்­பட்­டுள்­ளன.

ஆயி­ரக்­க­ணக்­கானோர் காண­ாமல்­போன சம்­பவம் தொடர்பில் இது­வரை விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வு­மில்லை. சம்­பந்­தப்பட்­ட­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­ப­ட­வு­மில்லை.

எனவே, அர­சாங்கம் ஐ.நா. மனித உரிமைப் பேர­வைக்கு வாக்­கு­றுதி அளித்­த­வாறு காணா மல்போனோர் சம்­பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­கு­மெ­னவும் ஐ.நா. குழு­வினர் தெரி­வித்­துள்­ளனர்.

திரு­கோ­ண­மலை இர­க­சிய தடுப்பு முகாம் குறித்து அக்­கு­ழு­வினர் இன்னும் பல அவ­தா­னிப்­புக்­களை பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

அது யாதெனில், கடற்­படை தளத்­தடி நிலத்­தடி தடுப்பு முகாமில் பெரும் எண்­ணிக்­கை­யானோர் நீண்ட காலம் தடுத்து வைத்து விசா­ரணை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம். இவ்­வி­டயம் உயர்­மட்­டங்­க­ளுக்கு தெரி­யாமல் நடந்­தி­ருக்க வாய்ப்­பில்லை.

சித்­தி­ர­வ­தைக்­கென்றே மாறுபட்ட விதத்தில் தடுப்பு முகாம் வடிவமைக்கப் பட்டுள்ளது. மேற்படி முகாம் சுவர்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களால் பல கூற்றுக்கள் எழுதப்பட்டுள்ளன.

2009ஆம் ஆண்டிலிருந்தே விசாரணைகள் ஆரம் பிக்கப்பட்டதாக கூறப்பட்ட போதும் இரகசிய முகாமில் 2010 வரை பலர் தடுத்து வைக்கப்பட்ட தடயங்கள் தெரியப்படுகிறது என ஐ.நா. குழுவினர் தமது சந்தேகங்களை கிளப்பியிருக்கின்றனர்.

ஏலவே, இவ்வாறானதொரு முகாம் எங்கும் இல்லையென அடித்துக் கூறிய இந்த அரசாங்கமும் பிரதமரும் இதற்கு என்ன பதில் கூறப்போகின்றார்கள் என் பதை பொறுத்திருந்து பார்ப்போமென சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version