பஹ்ரனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆர்.ஆர். குழுமத்தின் தலைவர் ரவி பிள்ளை. கேரளாவை சேர்ந்த இவருக்கு, வளைகுடா நாடுகளில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.
இவரது மொத்த சொத்து மதிப்பு 19 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஆகும். ரவி பிள்ளையின் மகள் ஆர்த்திக்கும் கொச்சியை சேர்ந்த ஆதித்யா விஷ்ணுவுக்கும் கொல்லத்தில் இன்று திருமணம் நடைபெற்றது.
இதற்காக கொல்லத்தில் உள்ள அஷ்ராம் மைதானத்தில், ரூ. 23 கோடி செலவில் பிரமாண்டமான செட் போடப்பட்டுள்ளது. இதனை ‘பாகுபலி’ பட புகழ் ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் அமைத்துள்ளார். சுமார் 30 ஆயிரம் விருந்தினர்கள் திருமணத்தில் பங்கேற்றனர். இந்த திருமணத்திற்காக ரூ.55 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
சவுதி, பஹ்ரைன், அமீரகம், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளை சேர்ந்த அரச குடும்பத்தினர், கேரள முதல்வர் உம்மண் சாண்டி போன்றவர்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.