சுவிட்சர்லாந்தில் உள்ள டிசினோ மாநிலத்தில் பொது இடங்களில் பெண்கள் முகத்தை மறைக்கும்படி பர்தா அல்லது நிகாப் அணிந்து வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி பர்தா அணிந்து வரும் பெண்களுக்கு 6500 ஸ்ரேலிங் பவுன் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கான சட்டமூலம் கடந்த திங்கட்கிழமை அமைச்சர்கள் ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

தெற்கு சுவிட்சர்லாந்தில் இத்தாலி மொழி பேசும் மக்கள் வசிக்கும் டிசினோ மாநிலத்திலேயே இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமாகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக புர்காவுக்கு தடை விதித்து 2010ம் ஆண்டு பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version