இங்கிலாந்தில் சியான் பேரெட்(47) என்பவர் வளர்க்கும் செல்ல நாயான இரண்டு வயது கிரேட் டேன் வகையைச் சேர்ந்த பிரெஸ்லி, கார்ட்டூன் படத்தில் வரும் ஸ்கூபி டூ நாயை விட அதிகமாக பயப்படுகின்றது.
சுமார் எண்பத்து ஏழு கிலோ எடைகொண்ட இந்த நாய் ஆறு அடி உயரமாக உள்ளது. ஆனாலும், இந்த பலமான தோற்றம் பிரெஸ்லிக்கு பெரிதும் நம்பிக்கை அளிப்பதாக இல்லை என்கிறார் இதன் உரிமையாளர் சியான்.
பிளாஸ்டிக் பை முதல் சிறிய வகை உயரமே உள்ள நாயான ‘வெஸ்டி’ வரை பிரெஸ்லியின் உயரத்துக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத எல்லாமே அதை பயமுறுத்துகின்றன.