பிணையக்கைதிகளை கொலை செய்யும் காட்சிகள், தாங்கள் பயிற்சி எடுத்துக்கொள்ளும் முறைகளை அவ்வப்போது வீடியோ காட்சிகளாக வெளியிட்டு வரும் ஐ.ஸ் தீவிரவாதிகள் தற்போது அடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

ரஷ்ய விமானம் தாக்குதல் மற்றும் பாரீஸ் தாக்குதலையடுத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க தமையிலான கூட்டுப்படைகள், ரஷ்யா ஆகிய நாடுகள் சேர்ந்து உக்கிர தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலில் 130 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், இதற்கு பதிலடியாக ஐ.எஸ் தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

isis_train_003இந்நிலையில் நாங்கள் பலத்துடன் தான் இருக்கிறோம் என்பதை காட்டும் விதமாக, தங்கள் அமைப்பினர் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், தீவிரவாதிகள் தங்கள் முகத்தினை கருப்புத்துணியால் மூடிக்கொண்டு நிற்கின்றனர், தலைமை பயிற்சியாளர் ஒருவர், பந்துகளை உதைப்பது போன்று தீவிரவாதிகளை எட்டி உதைக்கிறார் மேலும் அவர்களது வயிற்றிலும் பன்ச் விடுகிறார்.

இந்த பயிற்சி மட்டுமின்றி, துப்பாக்கிசுடுதல், தரையில் ஊர்ந்து செல்லுதல், ஒருவர் மேல் ஒருவர் தாவிசெல்லுதல் போன்ற பயிற்சிகள் அதில் இடம்பெறுகின்றன.

அரபு இசை மற்றும் கோஷங்கள் பின்னணியில் ஒலிக்க இந்த காட்சிகள் அனைத்தும் இடம்பெறுகின்றன.

நல்ல சூரிய ஒளியில், பச்சைபுல்வெளி நிரம்பிய பகுதியில் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரபி நாட்டில் ஒரு கமெரா முன் பேசிக்கொண்டிருக்கும் போதே குண்டுவீச்சில் பலியான தீவிரவாதி: வைரலாக பரவும் வீடியோ (வீடியோ இணைப்பு)

 

 

Share.
Leave A Reply

Exit mobile version