நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர் தேக்கத்தில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் (29) கண்டுபிடிக்கப்பட்ட இச்சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த இவர் கடந்த வெள்ளிக்கிழமை (27) இரவு வீட்டில் இருந்து காணமல் போனதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிசில் அவரது பெற்றோர் முறைப்பாடு செய்திருந்திருந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரை தொடர்ந்து தேடிய பெற்றோர் தமது வீட்டின் அருகில் காண்ப்படும் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் ஏதோ மிதப்பதை கண்டு சென்று பார்த்த பொழுது தமது பிள்ளை இறந்து நீரில்
மிதப்பதை கண்டுள்ளனர்.