கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு,ஷாமிலி நடிக்கும் புதிய படம் வீர சிவாஜி. படத்துக்கு இசை டி.இமான்.
சிறிய வயதில் தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த ஷாமிலி இடையில் தெலுங்கில் ஒரிரு படங்கள் நடித்தார் பின்னர் சினிமாவில் பெரிதாக பிரகாசிக்கமுடியவில்லை.
இந்நிலையில் மீண்டும் தனுஷின் புதிய படம், மற்றும் விக்ரம் பிரபுவின் வீர சிவாஜி படங்கள் மூலம் ரீஎண்ட்ரி ஆகியுள்ளார்.
வீர சிவாஜி படம் பற்றி இயக்குநர் கணேஷ் வினாயக் கூறூம்போது…
கதாநாயகனுக்கும் ஒரு குழந்தைக்கும் நடக்கும் பாச பிணைப்பை மையப்படுத்திய கதை. இதில் காதல், ஆக்ஷன், காமெடி கலந்து ஜனரஞ்சகமான படமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில் படத்தின் புகைப்படங்கள் நேற்று முதல் இணையங்களில் சுற்றலில் உள்ளன.
அதில் ஒரு புகைப்படத்தில் ஷாமிலி இருசக்கர வாகனத்தில் வருகிறார் அந்த வாகனத்தின் முகப்பில் விஜய்யின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது.
இதுகுறித்து படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்ததில் சில சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன.
படத்தில் ஷாமிலி விஜய் ரசிகையாம். மேலும் படத்தின் முக்கியமான காட்சியே இந்த விஜய் படத்தை வைத்துதான் எனத் தெரியவந்துள்ளது.
படத்தில் விஜய் ரசிகை என்பதை அழுத்தமாகச் சொல்லும் வகையில் காட்சிகள் இருக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது. ஷாமிலி, ஷாலினியின் தங்கை என்பதும், அஜித்தின் மச்சினி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இணையத்தை கலக்கும் உதயநிதி ஸ்டாலினின் “கெத்து” திரைப்பட ட்ரெய்லர்!