உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சியை மேற்கொண்ட பின்னர் வீட்டுக்குச் சென்றவர்கள், வீட்டிலிருந்த பெண்கள் மீது குத்துச்சண்டை ஒத்திகை பார்த்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற இந்த சம்பவத்தால், இரண்டு பெண்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடற்பயிற்சி கூடத்தில் செய்து பார்த்த உடற்பயிற்சியை,  மதுபோதையில் வீட்டுக்குச் சென்று அங்குள்ள பெண்கள் மீது அதனைச்செய்து பார்த்தமையாலேயே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது.

நாவற்குழி மற்றும் பெருங்குளம் பகுதியில் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள், மதுபோதையில் வீதிகளில் நின்று, அவ்வழியாகச் சென்று வருபவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்கின்றமை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

இவ்வாறு நடந்துகொள்பவர்கள், தங்கள் வீடுகளிலுள்ள பெண்கள் மீதும் இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version