மனிதர்கள் மல்லாந்து படுத்தும், குப்புறக் கவிழ்ந்தும், ஒருக்களித்துப் படுத்தும் தூங்குவார்கள். விலங்குகள் என்று எடுத்துக்கொண்டால் நாய், பூனை, ஆடு, மாடு போன்ற விலங்குகள் தூங்கும் விதத்தை நாம் பார்த்திருப்போம்.
நாம் அடிக்கடி காண முடியாத விலங்குகளும்கூடத் தூங்கும் இல்லையா? அந்த விலங்குகள் எப்படித் தூங்குகின்றன?
மான்கள் நின்றுகொண்டும், படுத்த நிலையிலும் தூங்கும். சில வகை மான்கள் தூங்கும் போது சுவாசத்தின் மூலம் எதிரிகள் அருகே வருவதைத் தெரிந்துகொள்ளும்.
வாத்து தரையில் நின்றுகொண்டும், நீரில் நீந்திக்கொண்டும் தூங்கும். சில நேரம் தரையில் படுத்தும் தூங்கும்.