கிளிநொச்சி ஆனந்த நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் கணவன் வெளியில் சென்றிருந்த வேளை நபர் ஒருவர் புகுந்து, தனியாக நின்ற வீட்டுப்பெண் முன் தனது ஆடைகளை களைந்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதைக்கண்ட அப்பெண் அவலக்குரல் கொடுத்ததை அடுத்து, குறித்த நபரை அக்கிராம இளைஞர்கள் வளைத்துப் பிடித்து நையப்புடைத்தனர்.
அதன்போது அந்த நபர் இராணுவப் புலனாய்வாளர் என கூறியுள்ளார்.
கிளிநொச்சி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, கிளிநெச்சி பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரைக் கைது செய்தனர்.
குறித்த நபர் இராணுவ புலனாய்வாளர் இல்லை என்றும் புலனாய்வாளர்களுடன் தொடர்பை பேணிவந்துள்ளார் எனவும்,
இவர் வவுனியாவை சேர்ந்தவர் தற்பொழுது கிளிநொச்சி தர்மபுரம் பகுதில் வசித்துவரும் ஜெயதேவா (தேவா) (வயது 30) எவும் பொலிஸ் விசாரணையின் போது தெரிய வருகின்றது.
இவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பொலிசாரின் தடுப்புக் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.