கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்செல்ஸ் அருகில் உள்ள சான் பெர்னார்டினோ என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது. சான் பெர்னார்டினோ நகரம் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டது.
துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தில் போலீசார் மற்றும் வெடிபொருள் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் விசாரணையில் ஒன்றிலிருந்த மூன்று பேர் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது தாக்குதல் நடத்தியவர்களின் பிடியில் யாருமில்லை.
San Bernardino Police Dispatch Audio
கலிபோர்னியா தாக்குதல்! சூத்திரதாரிகள் இருவர் சுட்டு கொலை
இந்த தாக்குதல் நடத்திய 3 துப்பாக்கிதாரிகள் தேடப்பட்டு வந்த நிலையில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் குற்றவாளிகளின் காரை பின்தொடர்ந்தனர். அப்போது அவர்கள் பொலிஸார் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர், பதிலுக்கு பொலிஸாரும் சுட்டனர். சில மணிநேரம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொலிஸார் எஸ்யுவி காரில் இருந்த இரண்டு பேரையும் சுட்டுக் கொன்றனர்.
மேற்படி சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனவும் முஸ்லிம் இனத்தவர்கள் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தீவிரவாதத்ததுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் மற்றுமொருவர் பொலிஸாரினால் தேடப்பட்டு வருகிறார்.