குவைத்தை சேர்ந்த நபர் ஒருவர் சவூதி அரேபியாவில் தேனிலவில் ஈடுபட்டிருந்த வேளையில் படுக்கையறையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என மனைவி விளக்கியதால் அப்பெண்ணை விவாகரத்து செய்துள்ளதாக சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.

மேற்படி பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி, அந்த குவைத் நபர், சவூதி அரேபிய பெண்ணொருவரை திருமணம் செய்திருந்தார்.

முதலிரவின்போது படுக்கையில் என்ன செய்வது என்பது குறித்து தனது கணவருக்கு தெளிவில்லாமல் இருப்பதை அப்பெண் உணர்ந்து கொண்டாராம்.

அதனால் மனைவியான தன்னுடன் படுக்கையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து கணவருக்கு அப்பெண் விளக்கினாராம்.

ஆனால், மனைவியின் இந்த துணிச்சலான செயற்பாடு அக்கணவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் மறுநாள் தனது மனைவியை அந்நபர் விவாகரத்து செய்தார்.

தனது மனைவி மிக துணிச்சலானவராகவும் முரட்டுத்தன மானவராகவும் இருப்பதாக அந்நபர் குற்றம் சுமத்தியாகவும் பின்னர் அவர் குவைத்துக்கு திரும்பிச் சென்றுவிட்டதாகவும் மேற்படி பத்திரிகை தெரிவித்துள்ளது.

தற்போது மணமகளின் குடும்பத்தினர் தமது மகளுக்கு அவமதிப்பை ஏற்படுத்தியதாக அந்நபர் மீது வழக்குத் தொடர தீர்மானித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version