யாழ்ப்பாணம் வேலணைப் பகுதியில் கடற்படையினரது பஸ் வண்டி மோதியதில் வேலணை மேற்கு நடராஜ வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்று வந்த மாணவி உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்தநிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மாணவி உயிரிழந்துள்ளார். நேற்றுக் காலை இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் நாரந்தனை
வடக்கு ஊர்காவற்றுறையைச் சேர்ந்த உசாந்தி உதயகுமார் (வயது 15) என்ற மாணவியே உயிரிழந்தவராவார். விபத்துச் சம்பவத்தை அடுத்து பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதேவேளை குறித்த விபத்தை ஏற்படுத்திய பேருந்தைசெலுத்திய வாகன சாரதியை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு -ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் சபேஷன் உத்தரவிட்டுள்ளார்.
விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மாணவி காலை ஏழு மணியளவில் பாடசாலையில் இடம்பெறவுள்ள ஒளி விழா நிகழ்வுக்காக துவிச்சக்கரவண்டியில் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இவர் புளியங்கூடல் சரவணை சந்திக்கு அருகாமையில் சென்ற நிலையில் பின்னால் வந்த கடற்படையினரின் வாகனம் அவரை முந்திச் செல்லமுற்பட்டது. இதன்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தலைப்பகுதியில் படுகாயமடைந்த மாணவியை மோதிய கடற்படையினரின் வாகனமே யாழ்.போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. எனினும் வைத்தியசாலைக்குக் கொண்டு வரும் வழியில் மாணவி உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை ஊர்காவற்றுறை பொலிஸார் தம்மிடம் என்ன உதவி வேண்டுமானாலும் கோருமாறும் அதனை தாம் செய்து தருவதாக உறுதி மொழி வழங்கியதாக உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவியின் தாயும் தந்தையும் கூலி வேலை செய்பவர்களாவர். தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் அவர்களது வீட்டுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அவர்கள் உறவினர் ஒருவரது வீட்டிலேயே தற்போது தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் பெண்ணொருவர் தீக்குளித்து தற்கொலை; மண்வெட்டியால் தாக்கி மற்றொரு பெண் கொலை
04-12-2015
நேற்றிரவு 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் 48 வயதுடைய பெண்ணொருவர் என்பதுடன், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிய வந்துள்ளது.
இதுதவிர தெஹியத்தகண்டி, தொலகந்த பிரதேசத்தில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு 35 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் உயிரிழந்த பெண்ணின் 09 வயதுடைய மகள் சிறுகாயங்களுடன் தெஹியத்தகண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்காக தெஹியத்தகண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியாவில் இராணுவ வீரர் தூக்கில் தொங்கி தற்கொலை
04-12-2015
நேற்று பிற்பகல் 6.50 மணியளவில் முகாமிற்கு அருகில் இருந்த மரம் ஒன்றில் தூக்கில் தொங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
20 வயதுடைய சிலாபம், குமாரஎலிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.