மஹிந்த புலி­களை விடு­வித்­தது சரியெனில் நான் கைதி­களை விடு­தலை செய்வது தவறா? ஜனா­தி­பதி சபையில் கேள்வி

கருணா அம்­மானை சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரா­கவும் பிள்­ளை­யானை முத­ல­மைச்­ச­ரா­கவும் நிய­மித்து கே.பி.யை பாது­காத்­த­துடன் புலிப்­ப­யங்­க­ர­வாத போர்க்க­ளத்தில் நின்­றி­ருந்த 12000 புலி உறுப்­பி­னர்­களை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ   விடு­தலை செய்தது சரி­யென்றால் சந்­தே­கத்தின் பேரில் கைது­செய்­யப்­பட்டு சிறை­களில் இருந்­த­வர்­களை நான் பிணையில் விடு­வித்­தது தவறா? என்று ஜனாதி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று சபையில் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

“கப­டத்­த­ன­மான அர­சி­யல்­வா­தி­களின் இறுதிப் புக­லி­டமே தேசப்­பற்று” என்று இந்­தி­யாவின் முன்னாள் பிர­தமர் அமரர் ஜவஹர்லால் நேரு தெரி­வித்­தி­ருப்­ப­தா­கவும் ஜனா­தி­பதி இதன் போது சுட்­டிக்­காட்­டினார்.

இதே­வேளை யுத்தம் நிறை­வ­டைந்த ஆறு வரு­டங்கள் கடந்­துள்ள போதிலும் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடக்கு கிழக்கு மக்­களின் மனங்களை வெல்­வ­தையும் அவர்­க­ளது நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தையும் முன்­னைய அர­சாங்கம்தவ­ற­விட்டு விட்­டது என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்தார்.

வடக்கு இளை­ஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்­து­வதை தடுப்­ப­தற்கும் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்­று­விக்­கப்­ப­டா­தி­ருப்­ப­தற்­கு­மான செயற்றிட்­டங்­களை முன்­னெ­டுத்து தேசிய நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தையே எமது அர­சாங்கம் செய்து வரு­கின்­றது என்றும் கூறினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தின் இரண்டாம் நாள் குழுநிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

வரவு செல­வுத்­திட்ட விவா­தத்தில் இரண்­டா­வது நாளா­கவும் கலந்து கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்­றைய தின பாது­காப்பு அமைச்சின் மீதான குழு நிலையில் கலந்து கொண்டு மேலும் உரை­யாற்­று­கையில்

யுத்­தத்தை நிறை­வுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு நாம் நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கின்ற அதே­வேளை இதன் பிர­தா­னி­யாக இருந்த முன்னாள் இரா­ணுவத் தள­பதி மார்ஷல் சரத்­பொன்­சே­கா­வுக்கும் அவ­ருடன் இணைந்து செயற்பட்ட ஏனைய முப்­படை பிர­தா­னிகள், படை­வீ­ரர்கள் ஆகி­யோ­ருக்கும் அதே­நேரம் அர்ப்­ப­ணிப்­புக்­களை செய்த நாட்டு மக்­க­ளுக்கும் அதன் கௌரவம் உரித்­தா­கின்­றது என்­ப­தனை தெரி­விக்­கின்றேன்.

யுத்தம் நிறை­வ­டைந்து ஆறு வரு­டங்கள் ஓடி­விட்­டன. . எனினும் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடக்கு கிழக்கு மக்­களின் மனங்கள் வெல்லப்­ப­ட­வில்லை. அந்த மக்­களின் நம்­பிக்­கையை காட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு முன்­னைய அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டிருக்­க­வில்லை.

முன்­னைய அர­சாங்கம் செய்யத் தவ­றிய விட­யங்­களின் பின்­ன­ணியில் எழுந்­துள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு எமது அர­சாங்கம் முகம் கொடுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் என்­றெல்லாம் வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்ட போதிலும் அங்­குள்ள மக்­க­ளி­ட­மி­ருந்த இரா­ணு­வத்தின் மீதான வெறுப்பு விடுப்­பட்­டி­ருக்­க­வில்லை. பாதிக்­கப்­பட்ட அந்த மக்­க­ளி­டத்தில் மகிழ்ச்சி இருக்­க­வில்லை.

2015 ஆம் ஆண்டு வரையில் அந்த மக்­களின் கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலையில் தான் எமது புதிய அர­சாங்கம் இவற்றை நிவர்த்தி செய்யும் என நம்­பு­கிறேன்.

அந்த நம்­பிக்­கையின் பேரில்தான் வடக்கு கிழக்கு தெற்கு என அனைத்துப் பகுதி மக்­களும் இணைந்து வாக்­க­ளித்­தி­ருந்­தனர். இதன் பிரகாரமே தேசிய நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு நாம் செயற்­பட்டோம்.

அதற்­கா­கவே முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்­கவை தலை­மை­யாகக் கொண்ட தேசிய நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவும் ஸ்தாபிக்­கப்­பட்­டது. தேசிய நல்­லி­ணக்கம் எனும் போது அனைத்துத் தரப்­பி­ன­ரு­ட­னான பேச்­சு­களின் ஊடாக அது இடம்­பெற வேண்டியதாக இருக்­கின்­றது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவினால் ஸ்தாபிக்­கப்­பட்­ட­தான கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழுவின் சிபா­ரிசும் சர்­வ­தேச மனித உரி­மைகள் பேர­வையின் சிபா­ரிசும் இந்­நாட்டில் தேசிய நல்­லி­ணக்கம் ஒன்றைக் கட்­டி­யெ­ழுப்ப முயற்­சிக்க வேண்டும் என்ற ரீதியில் அமைந்­தி­ருக்­கின்­றன.

சிறைக்­கை­திகள் சிலரை பிணையில் விடு­தலை செய்­தது தொடர்பில் இங்கு கருத்து வெளி­யிட்டு வரு­கின்ற சிலர் நாட்டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் என்று கூறி­வ­ரு­கின்­றனர். இது அடிப்­ப­டை­வா­தி­களின் கருத்­தாகும்.

இந்­தி­யாவின் முன்னாள் பிர­தமர் அமரர் ஜவ­கர்லால் நேரு­வினால் பேசப்­பட்ட ஒரு விடயம் எனக்கு இன்றும் ஞாப­கத்தில் இருக்­கின்­றது.

அவர் பேசு­கையில் “கப­டத்­த­ன­மான அர­சி­யல்­வா­தி­களின் இறு­திப்­பு­க­லி­டமே தேசப்­பற்று” என்று கூறி­யி­ருந்தார். எனவே எம்­மி­டத்தில் அடிப்­ப­டை­வாதம் வேண்டாம்.

அப்­பாவி மக்­க­ளி­டத்­திலும் பௌத்த மதத்தைக் கடை­பி­டித்து வரு­வோரின் மனங்­க­ளிலும் இவ்­வா­றான குரோ­தங்­களை விதைக்க வேண்டாம் என்று கேட்­டுக்­கொள்­கின்றேன்.

புலிப்­ப­யங்­க­ர­வாத அமைப்பின் பிர­தா­னி­யாக இருந்த கருணா அம்­மானை பிர­தி­ய­மைச்­ச­ராக்­கிய முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ அவரை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உப தலை­வ­ரா­கவும் நிய­மித்தார்.

அதே­போன்று புலி­களில் கிழக்குப் பகு­தியைச் சேர்ந்த பிள்­ளை­யானை கிழக்கு மாகாண முத­ல­மைச்­ச­ராக நிய­மித்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ புலி­களின் அமைப்­புக்கு ஆயுதம் விநி­யோ­கித்­த­வரும் அவ்­வ­மைப்பின் தலை­வர்­களில் ஒரு­வ­ரா­கவும் இருந்து கப்பல்க­ளையும் பெருந்­தொகைப் பணத்­தையும் தன்­ன­கத்தே கொண்­டி­ருந்த கே.பி.யையும் பாது­காத்­துள்ளார்.

இவை­ய­னைத்­தையும் நாம் தவ­றென்று கூற­வில்லை.

தேசிய நல்­லி­ணக்­கத்­துக்கு இது முன்­னு­தா­ர­ண­மாகும். அதனை நாம் ஏற்­கின்றோம். அது­மாத்­தி­ர­மின்றி ஆயுதம் ஏந்தி யுத்த களத்தில் போரிட்ட புலிப் பயங்­க­ர­வா­தத்­துடன் நேரடித் தொடர்­பு­டைய 12000 பேரையும் முன்னாள் ஜனா­தி­பதி விடு­தலை செய்­தி­ருந்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மேற்­கண்­ட­வாறு புலி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­களை விடு­தலை செய்­வா­ராக இருந்தால் கருணா அம்­மானை சு.க.வின் உபத்­த­லை­வ­ராக நிய­மிப்­பா­ராக இருந்தால் பிள்­ளை­யான முத­ல­மைச்­ச­ராக நிய­மிப்­பா­ராக இருந்தால் கே.பியைப் பாது­காப்­பா­ராக இருந்தால் சந்­தே­கத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் இருந்தோரை நான் விடுதலை செய்ததுதான் தவறா?

இங்குள்ள ஒவ்வொருவரும் மனசாட்சியைத் தொட்டு இதற்குப்பதில் கூறவேண்டும். இனவாதத்தை தூண்டிவிட முடியும். இனவாதம் எம்மாலும் பேச முடியும்.

இனவாதம் பேசி எம்மாலும் அரசியல் செய்ய முடியும். எனினும் அவை எதிர்காலத்துக்கு சாபகேடாகவே அமையும். அவ்வாறு பாவத்தை செய்வதற்கு நாம் தயாரில்லை.

இந்நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலும் வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்திவிடக்கூடாது என்பதிலும் நாம் உறுதியாக இருக்கின்றோம். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம். இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவோம் என்றார்.

…………
என்னா கதையிது???
மகிந்த தரப்பும், மைதிரி தரப்பும் மாறி மாறி   சிறைக்கைதிகளை  விடுதலை செய்ததாக கூறுகிறார்களே.. அப்படி எத்தனைபேரை விடுதலைசெய்துள்ளார்கள்??  யார் இதைபற்றி  கேள்வி   கேட்பது??

Share.
Leave A Reply

Exit mobile version