மஹியங்கனையில் ஆடைத்    தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த யுவதியொருவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் , குறித்த கொலை மற்றும் வல்லுறவின் சந்தேகநபர் மஹியங்கன காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் , வேறொரு சிறுமியுடன் மறைந்திருந்த போதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவர்கள் இருவரும் விஷம் குடித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவருடன் இருந்த பெண் 15 வயதானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் 20 வயதானவர் எனவும் , அவர் இதற்கு முன்னரும் திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அப்பெண்ணை விட்டு இச்சிறுமியுடன் வாழந்து வந்துள்ளதுடன், இது தொடர்பில் வழக்கொன்றும் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் காட்டுக்குள் மறைந்திருந்த சந்தேகநபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரே தன்னுடன் இருந்த சிறுமிக்கும் விஷத்தை குடிக்க க் கொடுத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

Loves-01

Share.
Leave A Reply

Exit mobile version