பன்னல , ஹாவன்ஹெலிய பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து தாய் மற்றும் அவரது மகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தாயின் வயது 45 எனவும் , மகளின் வயது 20 எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்தே சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மகளின் காதலன் கல்யாணத்தை துரிதமாக நடத்தக்கோரி அடிக்கடி சண்டையிட்டு வந்தமையே தற்கொலைகளுக்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த யுவதியின் காதலன் இராணுவத்தில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்படுகின்றது. அவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து சண்டையிட்டு செல்வதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் யுவதிக்கு அதிக கட்டுப்பாடுகள் விதித்திருந்த தாகவும், தாக்கியும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலைக்கான காரணமாக இருக்குமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாயின் கணவர் ,அதாவது யுவதியின் தந்தை உயிரோடு இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version