சிறிலங்கா பொலிஸ்காரர்கள்  மீது  யாராவது கைவைக்க  முடியுமா?? அடித்தால் என்னசெய்வார்கள் என்பது தெரியும்தானே! அப்படியிருந்தும்   துணிந்தவன் ஒருவன் அடித்துவிட்டானே. ஆனால் கையால் அடித்தவனா? காலால் அடித்தவனா? என்பதை பாருங்கள்

போக்குவரத்து பொலிஸ் அதிகாரியொருவர் மீது தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் தொடர்பான காணொளி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

எஸ்.கே. சந்தி எனப்படும் பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலை நட த்திய நபர் மதுபானசாலையொன்றில் நன்கு குடித்துவிட்டு சர்ச்சையில் ஈடுபடவே , அவரை விசாரிக்க குறித்த பொலிஸ் அதிகாரி அங்கு சென்றுள்ளார்.

இதன்போது அவரைக் கைதுசெய்யும் பொருட்டு வேறொரு பொலிஸ் அதிகாரியையும் அங்கு வரவழைத்துள்ளார்.

இருவரும் குறித்த நபரைக் கைது செய்து அழைத்துச் சென்ற வேளையில் போதையில் இருந்த நபர் கழிவு நீர் கால்வாயொன்றுக்குள் விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரை வைத்தியசாலையொன்றுக்கு கொண்டு சென்ற வேளையிலேயே அவர் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளதுடன் தகாத வார்த்தைகளால் திட்டியுமுள்ளார்.

காணொளியை பார்க்கவும்…

 

 

Share.
Leave A Reply

Exit mobile version