திருமணமாகி ஏழரை வருடங்களான பின்னரும் தான் கன்னியாக இருப்பதாக தெரிவித்த பெண்ணொருவருக்கு மால்டா நாட்டின் நீதிமன்றமொன்று விவாகரத்து வழங்கியுள்ளது.
இப்பெண்ணுக்கு 2000 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், இப்பெண்ணும் அவரின் கணவரும் ஒரு தடவைகூட உடலுறவில் ஈடுபடவில்லை என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இப்பெண்ணின் கணவருக்கு பாலியலில் எவ்வித ஆர்வமும் இல்லையாம்.
திருமணம் முடிந்தவுடன் தேனிலவுக்காக இவர்கள் வெளிநாட்டுக்குச் சென்றனர். தேனிலவு காலத்தில்கூட இவர்கள் நெருங்கியிருக்கவில்லை.
சில நாட்களின் பின் இவர்கள் மால்டாவுக்கு திரும்பியவுடன் தனது மனைவியுடன் ஒரே வீட்டில் தங்குவதற்கும் மேற்படி கணவன் ஆர்வம் காட்டவில்லை.
அவர் தனது தந்தை, தாயுடன் வேறொரு வீட்டிலேயே தங்கியிருந்தார்.
திருமணமாகி ஏழரை வருடங்களான பின்னர் இப் பெண் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார்.
தான் குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு விரும்புவதாகவும் அதற்கு உடல்ரீதியாக தகுதியான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்த அப்பெண், மருத்துவ பரிசோதனை அறிக்கைகளையும் சமர்ப்பித்தார்.
எனினும் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு தனது கணவர் விரும்பவில்லை எனவும் அவர் தனது தொழிலிலேயே “பிஸியாக” இருப்பதாகவும் அப்பெண் தெரிவித்தார்.
தனது கணவருக்காக தான் எல்லாவற்றையும் செய்த போதிலும் அவர் தன்னை நேசிக்கவில்லை எனவும் தன்னை ஒருபோதும் எதற்காகவும் பாராட்டவுமில்லை எனவும் அப்பெண் தெரிவித்தார்.
இவ்வழக்கில் சாட்சியமளித்த மருத்துவர் ஒருவர், இத்தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடிய உடற் தகுதியுடன் உள்ளபோதிலும் அதற்கேற்ற வகையில் அவர்கள் உடலுறவில் ஈடுபடவில்லை எனத் தெரிவித் தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேற்படி பெண்ணின் கோரிக்கையின்படி விவகாரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது.