இறம்பொடை ஆற்றில் நீராடச் சென்ற இரு பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை (13) 04.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொத்மலை பொலிசார் தெரிவிக்கின்றனர்.
26 வயதான ஆசிரியர் ஒருவரும் 33 வயதான தாதி ஒருவருமே சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.
இவர்களில் அனேகமானவர்கள் நீராடி விட்டு வௌியே வந்த பின்னும் குறித்த இரு பெண்களும் நீண்ட நேரம் நீரில் இருந்துள்ளனர்.
இந்தநிலையில் இருவரது சடலமும் இன்று காலை (14) கண்டுபிடிக்கப்பட்டது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.