தமிழக வெள்ள நிவாரணத்திற்காக முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு லைக்கா நிறுவனம் சார்பாக 5 கோடி ரூபாய்க்கான காசோலை கையளிக்கப்பட்டது.   அதேநேரம்  சங்கரின்  எந்திரன் 2 படத்தையும் லைக்கா  நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

அண்மையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர் ஆகிய பகுதிகள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைப்பதற்காகவும், மீட்பதற்காகவும் தமிழக முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு ஏராளமானவர்கள் தங்களால் இயன்ற பொருளுதவிகளை அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழக மக்களின் பாதிப்புகளை உணர்ந்த லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் லைக்கா நிறுவனத்தின் சார்பாக ஐந்து கோடி ரூபாய்க்கான காசோலையை, தமிழக அரசின் நிதித்துறை செயலர் நாயகம் சண்முகம் அவர்களிடம் கையளித்தார்.

லைக்கா நிறுவனத்தின் இந்த தாராளமான நிதி உதவியை திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் மனமுவந்து பாராட்டியிருக்கிறார்கள்.

எந்திரன் 2 பட தலைப்பு மாறியது

17-1450327299-endhiran-2-stills27-600
ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்த படம் ‘எந்திரன்’. இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று வசூலில் பெரிய சாதனையையும் படைத்தது.

தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். ஐஸ்வர்யா ராய், கருணாஸ், சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஷங்கர் மும்முரமாக களமிறங்கினார். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தை மிக அதிக பட்ஜெட்டில் உருவாக்க முடிவு செய்தார்.

லைக்கா  நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.

ரஜினியின் பிறந்தநாளன்று இப்படத்தின் படப்பிடிப்பை மிகவும் பிரம்மாண்டமாக தொடங்க திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், மழை வெள்ளம் காரணமாகவும் ரஜினி கேட்டுக் கொண்டதால் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று எளிய முறையில் தொடங்கப்பட்டது.

இப்படத்தை ‘எந்திரன் 2’ என்று அழைத்தார்கள். ஆனால் இப்படத்தின் தலைப்பு ‘2.ஓ’ என்று மாற்றியிருக்கிறார்கள்.

மேலும் லைக்கா நிறுவனம் சிரஞ்சீவியை வைத்து ஒரு படமும், இந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கும் ஒரு படமும், ஜி.வி.பிரகாஷை வைத்து ஒரு படமும் தயாரிக்கிறார்கள்.

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குகாக மக்களின் துயர்வை போக்கும் எண்ணத்தில் நிவாரண நிதியாக ரூ.5 கோடி பணத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.

‘2.ஓ’ படத்தில் ரஜினியுடன் எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்தியாவின் தலைச்சிறந்த கலைஞர்களும், ஹாலிவுட் படங்களுக்கு பணியாற்றிய கலைஞர்களும் இப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version