கனடா நாட்டில் கிறிஸ்துமஸ் பாடலை பாடி காட்ட முடியுமா என சவால் விட்ட விளையாட்டு வீரர் ஒருவர் வியப்படையும் வகையில் பிரதமரும் அவரது மனைவியும் ஒன்றாக சேர்ந்து பாடலை பாடி அசத்தி உள்ளனர்.

கனடாவின் புகழ்பெற்ற பனி சறுக்கு ஹோக்கி விளையாட்டு வீரரான ன பி.கே சுப்பன், P.K. Subban Foundation என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி ஏழைகளுக்கு உதவி வருகிறார்.

இந்நிலையில், எதிர்வரும் கிறிஸ்துமஸ் அன்று ஏழைக்குழந்தைகளுக்கு உதவும் வகையில் நிதி திரட்டி வருகிறார்.

இதற்கு உதவும் வகையில், பிரபல கிறிஸ்த்துவ பாடலான ‘ஜிங்கில் பெல்ஸ்(Jingle Bells) என்ற பாடலை பாடி இந்த நிகழ்ச்சியை பிரபலப்படுத்துமாறு அவர் கனேடிய பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.

விளையாட்டு வீரரின் கோரிக்கை கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ ஏற்றுள்ளார்.

நேற்று ஏழைக்குழந்தைகளுக்கு பரிசு பொருட்களை வாங்குவதற்காக Moisson Montreal என்ற வணிக வளாகத்திற்கு தனது மனைவியான Sophie Gregoire வுடன் பிரதமர் வந்துள்ளார்.

அப்போது விளையாட்டு வீரரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், வணிக வளாகத்திற்குள்ளேயே மனைவியுடன் இணைந்து கிறிஸ்துமஸ் பாடலை உற்சாகமாக பாடி அசத்தியுள்ளார்.

இந்த பாடலை பிரான்ஸ் மொழியிலும் ஆங்கில மொழியிலும் இருவரும் பாடியுள்ளனர்.

டுவிட்டரில் நேற்று வெளியான இந்த பாடலை ஆயிரக்கணக்கானவர்கள் விரும்பியதுடன் அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்தும் வருகின்றனர்.

பிரதமர் மற்றும் அவரது மனைவி மட்டுமின்றி, கனடா நாட்டின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான CTV-யின் நிருபர்கள், நெறியாளர்கள் என அனைவரும் இந்த பாடலை பாடி வீடியோவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version