இசைஞானி இளையராஜா இசையமைத்த 1000வது படமான தாரை தப்பட்டை படப் பாடல்கள் இன்று அதிகாலை இணையத்தில் வெளியானது.
பாலா இயக்கத்தில் சசிகுமார் – வரலட்சுமி – சுரேஷ் களஞ்சியம் நடித்துள்ள படம் தாரை தப்பட்டை. நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் இது. பொங்கல் தினமான ஜனவரி 14-ம் தேதி இந்தப் படம் உலகெங்கும் வெளியாகிறது.
சாதனை
இந்தப் படத்தின் இசை வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருந்தார் இயக்குநர் பாலா. 1000 படங்களுக்கு இசையமைத்து பெரும் சாதனை செய்த இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழாவாக இதைக் கொண்டாடவும் முடிவு செய்திருந்தார்.
வேண்டாம் விழா
ஆனால் சமீபத்தில் பெய்த பெரும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் இப்படி ஒரு விழா வேண்டாம் என இளையராஜா உறுதியாகக் கூறிவிட்டார். எந்த விழாவும் இல்லாமல் சாதாரணமாக இசையை வெளியிடுங்கள் என்று அவர் கூறிவிட்டதால், இணையத்திலேயே தாரை தப்பட்டை இசையை வெளியிட்டுவிட்டார் பாலா.
அதிகாலை