கன்னி மரியாள் இயேசு பாலகனைப் பிர­ச­வித்­ததை குறிக்கும் நத்தார் தினத்­தை­யொட்டி ‘கன்னி’ ஆடாக கரு­தப்­பட்ட ஆடொன்று இரட்டை குட்­டி­களை ஈன்ற அதி­சய சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

நொட்­டிங்­கம்­ஷி­யரில் பார்ன்ஸ்பீல்ட் எனும் இடத்­தி­லுள்ள வைட் போஸ்ட் பண்­ணையைச் சேர்ந்த ரோஸி என்ற ஆடே இவ்­வாறு இரட்டைக் குட்­டி களை ஈன்­றுள்­ளது.

மேற்­படி ஆடு எந்­த­வொரு எதிர்­ப்பாலைச் சேர்ந்த ஆட்­டு­டனும் கல­வியில் ஈடு­பட்­ட­தாக கரு­தப்­ப­டாத நிலையில் அந்த ஆடு குட்­டி­களை ஈன்­றுள்­ளமை பண்ணை உரி­மை­யா­ளர்­களை வியப்பில் ஆழ்த்­தி­யுள்­ளது.

அத்­துடன் அண்­மையில் அந்தப் பண்­ணை­யி­லுள்ள விலங்­க­ளுக்கு மேற்­கொள்­ளப்­பட்ட அல்ட்­ரா­சவுண்ட் பரி­சோ­த­னையின் போதும் ரோஸி கர்ப்­ப­ம­டைந்­தி­ருப்­ப­தற்­கான எந்­த­வொரு அறி­கு­றியும் காணப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் அந்தப் பண்­ணையின் உரிமையாளர்களும் ஊழியர்களும் இதனை நத்தார் தினத்தையொட்டி இடம்பெற்ற அதிசயமாகவே கருதுகின்றனர்

Share.
Leave A Reply

Exit mobile version