பலஸ்­தீன காஸா எல்­லை­யி­லுள்ள கடலில் அங்கும் இங்கும் நீந்­திய மன­நலம் பாதிக்­கப்­பட்ட பலஸ்­தீன நப­ரொ­ரு­வர் சுட்டுக் கொல்ல­ப்படுவதை வெளிப்­ப­டுத்தும் காணொளி காட்­சி­யொன்று வெளி­யாகி பெரும் சர்ச்­சையை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்­திய படை­யி­னரே அந்த நபரை சுட்டுக் கொன்­ற­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.

அந்தக் காணொளிக் காட்­சியில் குறிப்­பிட்ட நபர் நிர்­வாணக் கோலத்தில் மத்­தி­ய­த­ரைக்­க­டலில் அங்கும் இங்கும் நீந்­து­கிறார்.

தொட­ர்ந்து அவர் துப்­பாக்கிச் சூட்­டுக்­குள்­ளாகி உயி­ரி­ழந்து அசை­வின்றி கடற்­க­ரை­யோ­ர­மாக காணப்­ப­டு­கிறார்.

அவர் மீது துப்­பாக்கிச் சூட்டை நடத்­திய படை­யினர் யாவர் என்­பது அந்தக் காணொளிக் காட்­சியில் காண்பிக்கப்படவில்லை.

சுட்டுக் கொல்­லப்­பட்ட அந்த மன நலம் பாதிக்­கப்­பட்ட நபர் கலீல் ஹஸ்ன் (26 வயது) என அடை­யாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அவ­ரது குடும்­பத்­தினர் தெரி­விக்­கையில், கலீல் மனநலப் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்ததாக கூறுகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version