சர்­வ­தேச டென்னிஸ் அரங்கில் 100 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் பணப் பரிசுத் தொகையை முதலில் எட்டப் போவது யார் என்ற போட்டி டென்னிஸ் ஜாம்­பவான் ரொஜர் ஃபெட­ர­ருக்கும் முதல் நிலை வீரர் நொவாக் ஜோகோ­விச்­சுக்கும் இடையில் நில­வு­கின்­றது.

மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) போட்­டி­களில் 17 சம்­பியன் பட்­டங்­களை சுவீ­க­ரித்­துள்ள சுவிட்­ஸர்­லாந்தின் ரொஜர் ஃபெடரர் (34 வயது) இது­வரை 97.3 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை பரிசுத் தொகை­யாக வென்­றுள்ளார்.

அதே­வேளை, பத்து மாபெரும் டென்னிஸ் பட்­டங்­களை தன­தாக்கிக் கொண்­டுள்ள சேர்­பி­யாவின் 28 வய­தான நொவாக் ஜோகோவிச், 94 அமெ­ரிக்க டொலர்­களை பணப்­ப­ரி­சாக வென்­றுள்ளார்.

இவர்கள் இரு­வரில் யார் முதன்­மு­தலில் 100 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் பணப்­ப­ரிசை எட்­டுவார் என்ற விட­யத்தில் டென்னிஸ் பிரி­யர்கள் ஆர்­வத்­துடன் காத்­து­நிற்­கின்­றனர்.

தொழில்சார் டென்னிஸ் வர­லாற்றில் இது­வரை எந்த ஒரு வீரரும் சரி, வீராங்­க­னையும் சரி இந்த மைல்­கல்லை இன்னும் நெருங்­க­வில்லை.

புத்­தாண்டில் நடை­பெ­ற­வுள்ள முத­லா­வது மாபெரும் டென்னிஸ் போட்­டி­யான அவுஸ்­தி­ரே­லிய பகி­ரங்க டென்னிஸ் போட்­டியில் சம்­பி­ய­னுக்கு 3.85 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் பணப்­ப­ரிசு காத்­தி­ருக்­கின்­றது.

இவர்கள் இரு­வரில் யாரா­வது ஒருவர் சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்தால் அவர் 100 மில்­லியன் டொலர் (1400 கோடி ரூபா )பணப்­ப­ரிசுத் தொகையை எட்­டிய முத­லா­மவர் என்ற சாத­னைக்கு உரித்­தாவார்.

மகளிர் பிரிவில் அமெ­ரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் இதுவரை 74 மில்லியன் அமெரிக்க டொலர்களை பணப்பரிசாக வென்றெடுத்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version