தனது தாய் இறந்துவிட்டதாக அவசர உதவிக்கு தகவல் தெரிவித்த மகளின் செயல் இங்கிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகர அவரச உதவி பொலிஸாருக்கு அழைப்பு எடுத்து பேசிய மகள் எனது தயார் இறந்துவிட்டார் என்றும் அதனால் அவசர உதவி வாகனம் தேவைப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

இதனைக்கேட்ட பொலிசாரும், விரைந்து செல்வதற்கு முன்னர், மீண்டும் அழைப்பில் வந்த மகள், தயார் விழித்துக்கொண்டார், அதனால் அவசர உதவி வாகனம் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

உண்மையில் நடந்தது என்ன? அளவுக்கதிகமாக மது அருந்தியிருந்த தாயார் மதுபோதையில் கிடந்துள்ளார், இதனைப்பார்த்த மகளும் தனது தாயார் இறந்துவிட்டார் என அவசரபிரிவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மான்செஸ்டர் பொலிசார், இப்படி ஒரு வேடிக்கையான சம்பவத்திற்கு பிறகு இருவரும் ஆவிகளாக உலாவுவார்கள் என கிண்டலாக கூறியுள்ளனர்.

mother_dead_004

Share.
Leave A Reply

Exit mobile version