லண்டன்: இங்கிலாந்தில் மேக் அப் அதிகம் என்று கூறி சிறுமியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் சஹ்ரா சாதிக் என்ற அந்த 15 வயது சிறுமி, பர்மிங்காம் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
அந்த பேருந்தில் இருந்த பெண் நடத்துனர், சஹ்ரா சாதிக்கின் சிறுமிகளுக்கான பயணச் சீட்டை வாங்கி பரிசோதித்துள்ளார்.
பின்னர் உன்னையும் உன் மேக் அப்பையும் பார்த்தால் சிறுமி போல் தெரியவில்லை என்று கூறி அந்த பெண்ணை நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார். மேலும் 35 பவுண்ட் அபராதமும் விதித்துள்ளார்.