sampanthan-hakeemசிறிலங்காவில் அரசியலமைப்பு மாற்றம் இடம்பெறவுள்ள நிலையில், அரசியலமைப்பு யோசனைகள் தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்ற பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் எம்.நிஸாம் காரியப்பர், ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

TNA-SLMC-talks

அரசியலமைப்பு யோசனைகள் தொடர்பாக இருகட்சிகளும் நடத்தியுள்ள முதல் கூட்டம் இது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் ஒருமித்த கருத்துகளை முன்வைப்பதற்கு இன்றைய சந்திபில் இணக்கம் காணப்பட்டதாகவும், இது தொடர்பில் சில விடயங்கள் ஆராயப்பட்டதாகவும் சந்திப்பில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கல்முனை உட்பட கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் நிலவி வருகின்ற தமிழ், முஸ்லிம் முரண்பாடுகளை சுமூகமாக தீர்க்கும் பொருட்டு உள்ளூர்மட்டத் தலைமைகள் மத்தியில் பேச்சுகளை முன்னெடுப்பதற்கும் இந்தச் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version