2016 ஆம் ஆண்டு ஆரம்பித்த கையோடு ஐ.எஸ் தீவிரவாதிகளும் தங்கள் வசம் சிக்கும் கைதிகளை கொலை செய்யும் வேலையை தொடங்கிவிட்டார்கள்.
இதன் முதட்கட்டமாக 5 நபர்கள், பிரித்தானிய பாதுகாப்பு சேவைக்கு உளவு வேலை பார்த்த குற்றத்திற்காக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோவை வெளியிட்ட ஐ.எஸ் அமைப்பு, அதில் பிரித்தானிய பிரதமர் கமெரூனுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
சுமார் 10 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், ஆரஞ்சு ஆடை அணிந்திருந்த 5 நபர்களும் முழங்காலிட்டபடி இருக்கின்றனர், அவர்கள் பின்னால் நின்றுகொண்டிருக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளில் ஒருவன், அரபு மொழியில், பிரித்தானிய பிரதமரே, நாங்கள் கூறுவது உங்களுக்குத்தான், நாங்கள் கொலைசெய்யப்போவது நம்பிக்கையற்றவர்களைத்தான்.
முக்கியமற்ற தலைவராக இருக்கும் நீங்கள், நிறைய பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது, எங்களுக்கு எதிராக அமெரிக்க நடத்திய பிரச்சாரங்கள் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், அவர்களிடம் நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள் .
அதுமட்டுமின்றி, எங்கள் மீது நீங்கள் நடத்திய தாக்குதலுக்காக உங்கள் குழந்தைகளை எங்களிடம் கொடுக்க வேண்டும் என்று பேசியுள்ளான்.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் இடமான சிரியாவில், பிரித்தானிய விமானப்படை 2015 ஆம் ஆண்டில் விமானப்படை தாக்குதலை நடத்தியது குறிப்பிடத்தக்கது.