‘நீங்கள் அழ­காக இருக்­கி­றீர்கள்’ என யாரா­வது உங்­க­ளிடம் கூறினால் உங்கள் பிர­தி­ப­லிப்பு எப்­ப­டி­யி­ருக்கும்?

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த  கலைத்­துறை மாண­வி­யொ­ருவர் இது தொடர்­பாக சமூக பரி­சோ­த­னை­யொன்றை நடத்­தி­யுள்ளார்.

 18 வய­தான ஷியா குளோவர் எனும் இம்­மா­ணவி, தனது பாட­சா­லையின் சக மாணவ மாண­விகள், ஆசி­ரி­யர்­களை கெம­ரா­வுக்கு முன்னால் நிற்க வைத்து, படம்­பி­டிப்­ப­தற்குத் தயா­ரா­ன­போது “நான் கண்ட அழ­கான விட­யங்­களை படம்­பி­டித்­துக்­கொண்­டி­ருக்­கிறேன்” என அவர்­க­ளிடம் கூறினார்.

 140271

இந்த வார்த்­தை­களைக் கேட்ட பெரும்­பா­லானோர் பெரும் மகிழ்ச்­சி­ய­டை­வது அவர்­களின் முகத்தில் தெளி­வாகத் தெரிந்­தது. இக்­காட்­சி­களை ஷியா குளோவர் வீடி­யோவில் பதி­வு­செய்து இணை­யத்தில் வெளி­யிட்­டுள்ளார்.

 

சிகாக்­கோவைச் சேர்ந்த ஷியா குளோவர் தனது வகுப்பின் ஒப்படைத் திட்டமொன்றுக்காக இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version