இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது.
20களில் இருக்கும் வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்ச கட்ட இன்பத்தை தொட்டு நின்றுவிடுகிறான். ஆனால் அந்நிலையில் பெண் முடிவுறாத வேட்கையுடன் மேலும் உறவுக்கு ஏங்கி நிற்பாள்.
ஆனால் நடு வயதில் கணவன் இயல்பாகவே மெதுவான, நிதானமாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் அதிக நேரம் நீடித்திருக்கிறான்.
சிகாகோ பல்கலைக் கழக ஆய்வறிக்கையின் படி 20 வயதுகளில் இருக்கும் பெண்கள் மிகக்குறைவாகவே உச்சட்ட சிலிர்ப்பு நிலையை அடைகின்றனர் என்றும் 40 வயதுகளில் இருக்கும் பெண்களே அதிகமாக அந்நிலையை அடைகின்றனர் என்றும் தெரிகிறது.
மனைவியை சிலிர்ப்பு நிலைக்கு கொண்டு போவதில் ஆர்வம் காட்டும் கணவன் இயல்பாகவே தானும் அந்தப் பரவசத்தை அடைகிறான்.
கவர்ச்சியைக் கண்ணால் கண்டாலே இளமைப் பருவம் மோக வயப்படும். வயது முதிரும் போது மோகத்திற்கு பார்வை மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. தொடு உணர்ச்சிகளே அந்நிலைக்குத்; தூண்ட முடியும்.
எனவே தான் இவ்வயதுகளில் நிதானமும் செயல்திறனும் இவ்விஷயத்தில் உதவிகரமாக இருக்கிறது.
இளமைக் காலத்தில் உறவுக்கு அழைப்பதில் ஆண்தான் முன்கை எடுக்கிறான். ஆனால் நடுவயதில் பெண்தான் ஆர்வம் மிகுந்தவளாக இருப்பாள்.
காரணம் ஆண் பெண் இருவர் உடலிலும் சுரக்கும் எஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் திரவங்கள் வயது கூடும்போது மாற்றமடைகின்றன.
ஆணுக்கு இவையிரண்டும் அளவில் குறையத் தொடங்கும். ஆனால் பெண் உடலில் டெஸ்டோஸ் டெரோனின் குறைவை எஸ்ட்ரோஜன் ஈடுகட்டுகிறது.
எனவேதான் ஆணை விடவும் பெண் நடுவயதில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள்.
ஆண் பெண் – தகாத உறவுகளுக்கு காரணம் என்ன?
திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன….?
* தம்பதியருக்கிடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில் தன் கணவனால் திருப்தியடைய முடியாத பட்சத்தில் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள்.
அதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிக மாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு நபரை நாடுகிறாள்.
* திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கிடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறை யக்கூடும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும் ஒரு காரணம்.
* திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு க0ளும், கற்பனைகளும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவன் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கேற்ற வேறு ஆண்களை நாடுகிறார்கள்.
* வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. வெளியு லகத் தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழியர்களுடன் நெருக்கமான நட்பு போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்குக் காரணம். தவிர கணவனைவிட அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரம் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும், விஷயங்களும் கிடைக்கின்றன. அது போகப் போக அவர்களுக்குள் தகாத உறவு மலர வழி வகுத்து விடுவதும் உண்டு.
* ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் தன் கணவன் அல்லாத வேறு ஆண்களின் ஸ்பரிசத்திலும், அணைப்பிலுமே சுகம் காண்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். செக்ஸில் தினம் தினம் புதுமையை நாடும் பெண்களும் உண்டு. அவர்கள் இப்படிப்பட்ட தகாத உறவில் சீக்கிரம் விழுந்து விடுகிறார்கள். மனோதத்துவ சிகிச்சை ஒன்றுதான் இவர்களுக்கு ஒரே தீர்வு.
* தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர் .